தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-02-19 15:22 GMT
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கிய மத்திய அரசின் வருமான வரித்துறையை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நேற்று, தஞ்சாவூர் மாநகர, மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குக மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தை முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில்,  காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கிய, மத்திய அரசின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உடனடியாக வங்கி கணக்கை முடக்கியதை ரத்து செய்ய வேண்டும்.

கடந்த தேர்தலின் போது பாஜக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார நிலை நிர்ணய சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் பயிர் கடன் உள்ளிட்ட வங்கிக்கடன், கூட்டுறவு வங்கி கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட விவசாய பிரிவுத் தலைவர் ஜேம்ஸ்,  பொதுக்குழு உறுப்பினர் ராமநாதன், பொதுச் செயலாளர் செந்தில் சிவக்குமார், வட்டாரத் தலைவர்கள் நாகராஜன், அன்பழகன்,  நிர்வாகிகள் கண்ணன், சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News