விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் எஸ்.சி, எஸ்.டி.பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-14 22:47 GMT

ஆர்ப்பாட்டம் 

அரசியல் சாசனத்தை திருத்தம் செய்வது தொடர்பான கருத்தை அண்மையில் வெளியிட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டேவை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி.பிரிவு மாவட்டத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் புஷ்பராஜ், கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், நாராயணசாமி முன்னிலை வகித்தனர். விழுப்புரம் நகர்மன்ற உறுப்பினர் முகமது இம்ரான் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் வினோத், எஸ்.சி., எஸ்.டி.பிரிவின் மாவட்டத் துணைத் தலைவர்கள் மணிகண்டன், சுரேஷ், நகரத் தலைவர் பாரிபாபு, ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், விழுப்புரம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபாகரன் ஆகியோர்உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோலியனூர் வட்டாரத் தலைவர் வசந்த், மாவட்டப் பொதுக்குழு உறுப் பினர் தன்சிங், நகர நிர்வாகிகள் துரைசிங், சுரேஷ், சேகர், திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத் தலைவர் குமரவேல், மாவட்டத் துணைத்தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்று, முழக்கங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News