இழப்பீடு வழங்கக்கோரி காங்., ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் இழப்பீடு வழங்கக்கோரி காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
நாகர்கோவிலில் இழப்பீடு வழங்கக்கோரி காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கன்னியாகுமரி முதல் களியக்காவிளைவரையிலும், காவல் கிணறு முதல் நாகர்கோவில் வரையிலும் நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்தப்பட்ட ஒரு சில பகுதி மக்களுக்கு அரசு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு உரிய தொகை இந்த நாள் வரை வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்தும், நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு இழப்புத் தொகை உடனே வழங்க கேட்டும் குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய துணை பொது மேலாளர் மற்றும் திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் செயலாளர் விஜயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் உதயம் (கிழக்கு) , டாக்டர் பினுலால் சிங் மேற்கு) ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ பங்கேற்று போராட்டத்தை தொடங்கி வைத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.