மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்;

Update: 2023-12-22 11:15 GMT

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் மத்தியில் ஆட்சி செய்யும் பிஜேபி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆட்சி செய்யும் பிஜேபி அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் விதமாக எதிர்க்கட்சி எம்பிக்களையும் அவை நடவடிக்கையில் இருந்து சஸ்பெண்ட் செய்ததை வன்மையாக கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News