திருநிலைபடுத்தும் விழா - குழித்துறை மறைமாவட்ட ஆயர் பொறுப்பேற்றார்

கன்னியாகுமரியில் ஆயர் திருநிலைப்படுத்தும் சடங்கு மற்றும் பணிப் பொறுப்பேற்பு விழா நேற்று மாலையில் நட்டாலம் புனித தேவ சகாயம் திருத்தலத்தில் தொடங்கியது.

Update: 2024-02-23 06:13 GMT

திருநிலைபடுத்தும் விழா 

கன்னியாகுமரி மாவட்டம் கத்தோலிக்க திருச்சபையின் குழித்துறை மறை மாவட்ட ஆயராக கடந்த மாதம் 13ஆம் தேதி ஆல்பர்ட் அனஸ்தாஸ் என்பவரை போப் பிரான்சிஸ் நியமித்தார். இந்த ஆயர் திருநிலைப்படுத்தும் சடங்கு மற்றும் பணிப் பொறுப்பேற்பு விழா நேற்று மாலையில் நட்டாலம் புனித தேவ சகாயம் திருத்தலத்தில் தொடங்கியது. முன்னதாக பிஷப் இல்லத்தில் இருந்து போப் ஆண்டவரின் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜெரல்லி மற்றும் ஆயராக  அறிவிக்கப்பட்ட ஆல்பர்ட் அனஸ்தாஸ் ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து ஊர்வலமாக அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விழாவில் மறை மாவட்ட அப்போஸ்தலிக் பரிபாலகர் அந்தோணி பாப்புசாமி தலைமையில், ஆயர்கள், பேராயர்கள் புதிதாக பொறுப்பேற்ற ஆயரை திருநிலை படுத்தினார்கள். தொடர்ந்து பணியின் அடையாளமாக   சிலுவை பொறித்த செங்கோல் வழங்கப்பட்டது. இதை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவரது இருக்கையில் அமர வைக்கப்பட்டு, பின்னர் திருப்பலி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேராயர்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள், இருபால் துறவிகள், கன்னியாகுமரி எம். பி விஜய வசந்த் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள்,  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News