ஸ்ரீ சோமேஸ்வரர் சோமசுந்தரி உடனுறை கோவிலில் காலபைரவர் சிலை பிரதிஷ்டை

ஸ்ரீ சோமேஸ்வரர் சோமசுந்தரி உடனுறை கோவிலில் காலபைரவர் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது.

Update: 2023-12-06 08:54 GMT

ஸ்ரீ சோமேஸ்வரர் சோமசுந்தரி உடனுறை கோவிலில் காலபைரவர் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தர்மபுரி மாவட்டம், 06/12/2023. ஸ்ரீ சோமேஸ்வரர் சோமசுந்தரி உடனுறை கோவிலில் காலபைரவர் சிலை பிரதிஷ்டம் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சோமேஸ்வரர் சோமசுந்தரி உடனுறை கோவில் உள்ளது, கோவில் வளாகத்தில் நவகிரகம் சூரியன், சந்திரன், விநாயகர், முருகர், காலபைரவர் உள்ளிட்ட ஆலயங்கள் உள்ளது , இன்று பழைய  சிலையை புதிய உலோக ஐம்பொன் காலபைரவர் உற்சவ சிலையை வேத மந்திரங்கள் முழங்கி, கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.

பின்னர் மகா பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் முன்னதாக யாக சாலையில் நெய், சந்தனம், இளநீர், புனித நீர், நவதானியம், காய்கறி. 108 மூலிகைகள், தேங்காய். வாழைப்பழம் ஆகியவற்றை யாகத்தில் இட்டு பூர்ணகதி செய்யப்பட்டது , பின்னர் கால பைரவர் சிலை பிரதிஷ்டம் செய்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் குலதெய்வ பங்காளிகள் பங்கேற்றனர் ,

Tags:    

Similar News