ஆதி திருவரங்கத்தில் புதிய தேர் கட்டுமான பணி மும்முரம்

Update: 2023-12-06 11:18 GMT

தேர் கட்டுமான பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மணலுார்பேட்டை அடுத்த ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த அரங்கநாதன் திருக்கோவில் உள்ளது. புராண இதிகாசங்களில் இத்தளத்தின் பெருமை விரிவாக கூறப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இத்தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பிரம்மோற்சவத்தின் போது தேர் பவனி வரும். தேர் சிதிலமடைந்த நிலையில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. புதியதாக தேர் செய்வதற்கு தொகுதி‌ எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், தேர் செய்ய ரூ.78.50 லட்சம் மதிப்பீட்டில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிதி ஒதுக்கி பணிகளை துவக்கியது. நேற்று தேர் செய்யும் பணியை மாவட்ட அறங்காவல் குழுத் தலைவர் பாலாஜி பூபதி, செயல் அலுவலர் பாக்யராஜ் நேரில் ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News