ஓட்டு எண்ணும் மையத்திற்கு தடுப்பு அமைக்கும் பணி

காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் காவல்துறை சார்பாக சவுக்கு கட்டைகளால் தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

Update: 2024-05-31 07:27 GMT

ஓட்டு எண்ணும் மையத்திற்கு தடுப்பு அமைக்கும் பணி

தமிழகத்தில், ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. அப்போது, காஞ்சிபுரம் லோக்சபா தனி தொகுதிக்கான தேர்தலும் நடந்நது. தேர்தலுக்கு பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை காஞ்சிபுரம் அடுத்த, காரப்பேட்டை அறிஞர் அண்ணா பொறியியல் கல்லுாரியில், பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு அறைகளுக்கு, ஏப்.,20ம் தேதி சீல் வைக்கப்பட்டது. ஓட்டு எண்ணும் மையத்திற்கு, துணை ராணுவம், ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் என, மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

ஜூன் -4ம் தேதி, லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த, ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வரும், அரசியில் கட்சி ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் அரசியல் கட்சியினரை கட்டுப்படுத்துவதற்கு, சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்பு அமைக்கும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, வாகனங்கள் நிறுத்துமிடம். முகவர்கள் காத்திருக்கும் இடம் என, ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த தடுப்பு கட்டைகள் மூலமாக, ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் அரசியில் கட்சியினரை கட்டுப்படுத்த சவுகரியமாக இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News