பேருந்து நிலையம் கட்டும் பணி தொடக்கம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.72 கோடியில் கூடுதல் பேருந்து நிலையம், கட்டும் பணி தொடக்கம்.

Update: 2023-11-04 10:52 GMT

பேருந்து நிலையம் கட்டும் பணி தொடக்கம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர். புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் பேருந்து நிலையம் கட்டுவதற்கு கடந்த செப்டம்பர் மாதம் பெரம்பலூர் நகராட்சியில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் அனுமதி பெறப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கூடுதல் பேருந்து நிலையம் கட்டுவதற்கு கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டு கூடுதல் பேருந்து நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையில் அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து பணிகள் தொடங்கப்பட்டன. இந்த கூடுதல் பேருந்து நிலையம் கட்டும் பணி ஓராண்டிற்குள் முடிவடைந்து பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று நகராட்சிதலை வர் அம்பிகா ராஜேந்திரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் ராமர், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News