மேல்மலையனூரில் புதிய சாலை, பள்ளி கட்டிடம் கட்டும் பணி - அமைச்சர் மஸ்தான் துவக்கி வைப்பு

மேல்மலையனுர் ஒன்றியத்தில் நடக்கும் திட்டப்பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

Update: 2023-10-31 05:39 GMT

அமைச்சர் செஞ்சி மஸ்தான் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டையிலிருந்து சேத்பட் செல்லும் சாலையை அகலப்படுத்தி ரூ.5.52 கோடி. மதிப்பீட்டில் புதியசாலை அமைக்கவும், கோட்டப்பூண்டி சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்து ரூ.1.80 கோடிமதிப்பீட் டில் புதியசாலை அமைப்ப தற்கு பூமி பூஜை விழா குந்தலம்பட்டு, மற்றும் கோட்டபூண்டி ஊராட்சியில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் சிவசேனா தலைமை தாங்கினார். வட்டார கல்வி குழுத் தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு. பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் கோட்டப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1கோடியே 70 லட்சத்தி 88 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 8 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு பூமிபூஜை செய்து பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி, தாசில்தார் முகமது அலி, ஒன்றியக் குழு துணை தலைவர் விஜய லட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராமசரவணன் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயபா நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர்கள் ஏழுமலை, சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் சரஸ்வதி ஜெயபிரகாஷ், கணபதி, ஷாகின் அர்ஷத், காசியம் மாள்கோதண்டம், ஊராட்சி மன்றதலைவர்கள்சரவணன், மணி, ஏகநாதன், சுந்தரி சுந்தர், துணைத் தலைவர் ஜெயந்தி விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News