சத்தியமங்கலத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி
சத்தியமங்கலத்தில் 19 லட்சம் மதிப்பீட்டில் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-02-29 17:16 GMT
ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இக்கரை நெகமம் ஊராட்சி இக்கரை நெகமம் ஊராட்சியில் 15வது நிதி குழு மானியம் 2023-2024 ஊராட்சி ஒதுக்கீடு நிதியின் கீழ் 19 லட்சம் மதிப்பீட்டில் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் KCP.இளங்கோ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகேந்திரன் அவைத் தலைவர் மாரிசாமி கிளைச் செயலாளர் சுப்பன் மற்றும் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் கொத்துக்காடு சிவா மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்