"சாலையில் கட்டட கழிவுகள் வாகன ஓட்டிகள் அவதி"
காஞ்சிபுரம் குமரகோட்டம் எதிரில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றன.இதனால் கழிவுகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.";
By : King 24x7 Angel
Update: 2024-02-02 06:46 GMT
கட்டட கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதி"
காஞ்சிபுரம் குமரகோட்டம் எதிரில், நெமந்தகார ஒற்றைவாடை தெரு உள்ளது. இந்த தெரு வழியாக குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில், பழனி ஆண்டவர் கோவில், திருவாடுதுறை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாசர் திருமடத்திற்கு செல்வோர் சென்று வருகின்றனர். பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த தெருவில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், சாலையின் அகலம் வெகுவாக குறைந்துள்ளது. இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்."