செல்போன் திருடிய கட்டிட தொழிலாளி கைது

பரமத்தி வேலூரில் கோவில் பூசாரியின் செல் போனை திருடிய கட்டட தொழிலாளியை வேலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-04 01:38 GMT

பைல் படம்

பரமத்திவேலுார் புது மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் நிறைவுபெற்றது. மாரியம்மன் கோவிலின் பூசாரி ஆறுமுகம் கோவில் வளாகத்தில் தனது செல்போனை வைத்து விட்டு மஞ்சள் நீராடல் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து செல்போனை பார்த்த போது அங்கு செல்போன் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் பல்வேறு இடங்களில் தேடியும் செல் போன் கிடைக்காததால்  வேலூர் போலீஸ் நிலையத்தில் காணாமல் போன தனது செல்போனை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களாக இரவில் படுத்து உறங்கும் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியை சேர்ந்த  முகமது சலீம் (40) என்பதும், தற்போது கட்டட வேலை செய்து வருவதும், இரவு நேரங்களில் கோயில் வளாகத்தில்  வந்து படுத்து உறங்குவதும் தெரிய வந்தது. மேலும் கோவில் பூசாரி ஆறுமுகத்தின் செல்போனை திருடியதும் தெரிய வந்தது. அதனையடுத்து வேலூர் போலீசார் முகமதுசலீமை கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News