மணவாளக்குறிச்சி அருகே கட்டிடத் தொழிலாளி தற்கொலை !
மணவாளக்குறிச்சி அருகே கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-06 10:14 GMT
விஷம்
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (59). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (54) இவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கோபாலகிருஷ்ணன் புதிதாக வீடு கட்டியதில் அவருக்கு கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடனை அடைக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டுக்கு கோபாலகிருஷ்ணன் மது அருந்தி விட்டு வந்து திடீரென வாந்தி எடுத்துள்ளார். அப்போது மதுவுடன் அவர் விஷம் கலந்து குடித்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோபாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவர் மனைவி பிரேமா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.