திருவாடனை அருகே கட்டிட தொழிலாளி சடலமாக மீட்பு

திருவாடனை அருகே கட்டிட தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-10-25 12:43 GMT

சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட கூலி தொழிலாளி ரமேஷ் (35) இவர் திருமணமாகத நிலையில் தினமும் வேலை முடிந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று காலையில் கட்டிடம் ஒன்றில் சென்ட்ரிங் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற ரமேஷ் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர்.

Advertisement

இந்த நிலையில் இன்று தொண்டி கொச்சின் தேசிய நெடுஞ்சாலை பள்ளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார் தீயணைப்பு வீரர்கள் மூலம் சடலத்தை விட்டு உடற் கூறாய்வுக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலைக்குச் செல்வதாக கூறி சென்ற தனது மகன் மூன்று நாட்களுக்குப் பின்னர் சாலையோர பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டதை கண்டு அவரது குடும்பத்தினர் கதறி கண்ணீர் விட் காட்சி கண் கலங்க வைத்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News