மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி மரணம்
திருநெல்வேலி மாவட்டம், பழையபேட்டை அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-07 12:55 GMT
கட்டிட தொழிலாளி பலி
நெல்லை மாவட்டம் பழையபேட்டையைச் சேர்ந்தவர் வினோத்குமார் (30). கட்டடத் தொழிலாளியான இவர் நேற்று வீட்டில் மின்மோட்டாரை இயக்கியபோது இவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.