அமைச்சர் எவ வேலு தலைமையில் ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Update: 2024-05-11 01:48 GMT
திருவண்ணாமலையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சரும், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளருமான எ. வ. வேலு தூய்மை அருணை மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது கழக மருத்துவரணி துணைத் தலைவர் எ. வ.வே. கம்பன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.