ஆதிதிராவிடர்,பழங்குடியின ஊராட்சி தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

Update: 2023-12-01 09:40 GMT

கலந்தாய்வு கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் கட்டாய கடமைகளான கிராம சாலைகள், பாலங்கள், தரைப்பாலங்களை பழுதுபார்த்தல், குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்தல், கழிவு நீர் கால்வாய் அமைத்து கழிவு நீரை அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பொது கழிப்பிட வசதி ஆகிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் கிராம ஊராட்சிகளின் விருப்புரிமை பணிகளான மரங்களை நட்டு பாதுகாத்தல், சந்தைகளை ஏற்படுத்தி பராமரித்தல், விழாக்கள் மற்றும் பொருட்காட்சிகளை நெறிப்படுத்துதல், விளையாட்டு திடல்கள், பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Tags:    

Similar News