புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கழக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-03-26 09:27 GMT
ஆலோசனைக் கூட்டம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ப.கருப்பையா B.Com அவர்களை ஆதரித்து, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பது தொடர்பாக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் MBBS., MLA. நடைபெற்றது. உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய,நகர, ஊராட்சி, உள்ளாட்சி மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.