ஆலங்குடி அருகே கும்பாபிஷேகம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம்

ஆலங்குடி அருகே கும்பாபிஷேகம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-03 13:52 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் சமேத அரங்குல நாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை பெருமை வாய்ந்த சுயம்புலிங்க சிவன் கோவிலாகும் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திருப் பணி கமிட்டி தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது.

கோவில் மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி திருப்பணி கமிட்டி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவரங் குளம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி ஆறுமுகம் ஒன்றிய கவுன்சிலர் சிதம்பரம் கொத்த கோட்டை ஒன்றிய கவுன்சிலர் ஆடிட்டர் கருப்பையா பூவரசகுடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலபதி அன்னமே திருவரங்குளம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம் ஆலங்குடி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் மண மோகன் உள்ளிட்ட வட்டாரப் பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அறநிலையத் துறைக்கு கோரிக்கை மனு அளிப்பது என்றும் கோவில் ராஜகோபுரத்தை புனரமைக்கவும் கோவில் மழைக்காலங்களில் மூலஸ்தானம் உட் பிரகாரத்தில் தேங்கியுள்ள மழை நீரால் பக்தர்கள் கோவில் உள்பிரகாரத்துக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் அதனை சரி செய்திடவும் கோவிலில் அன்னதான மண்டபம் அமைத்திடவும் கோவில் உள்ள சுவாமி அம்பாள் பவனி வரும் பல்வேறு வாகனங்களை செப் பணிடவும் கோவில் உள்ள பாரம்பரிய சிற்பங்களை பழமை மாறாமல் பராமரிப்பது என்றும் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி முள்வேலி அமைத்து பராமரித்து படிக்கட்டுகள் அமைத்து மின்விளக்குகள் அமைத்து பராமரிக்க புனித பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News