திருப்பூரில் மக்களவைத் தேர்தல்-2024 தொடர்பான ஆலோசனை கூட்டம்
திருப்பூரில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்களவை தேர்தல் -2024 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.;
Update: 2024-03-27 08:52 GMT
ஆலோசனை கூட்டம்
திருப்பூரில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவை பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து மாவட்ட நிலையிலான தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்ஜிகிரியப்பனவர், திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) கிருத்திகா விஜயன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.