ஈரோட்டில் ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
ஈரோட்டில் கல்லூரி தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் , மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இளம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது.இளம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் கல்லூரி தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தங்கள் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும்,
மேலும், மாணவ, மாணவியர்கள் தங்கள் கல்லூரிகளில் மாதிரி வாக்குப்பதிவு மையம் ஏற்படுத்தி, வாக்களிப்பது குறித்து அனைத்து மாணவ, மாணவியர்கள் பார்வையிட செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் உள்ள தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.