தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் வாக்கு எண்ணும் மையத்தில் செயல்படுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
18 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெற்று நேற்றைய தினத்துடன் முடிவடைந்தது. நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள எல் ஆர் ஜி அரசு கல்லூரியே வாக்கு என்னும் மையமாக செயல்பட உள்ளது. இந்நிலையில் வாக்கு என்னும் மையத்தில் செயல்படுவது குறித்து தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையாளரும் , உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 4ஆம் தேதி வாக்கு என்னும் மையத்தில் செயல்படும் விதம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வாக்கு என்னும் பணியின் போது அதிகாரிகள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் சுந்தர்ராஜ், 3 மற்றும் 4வது மண்டல உதவி ஆணையாளர் வினோத் , தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.