மாநகர பொறியாளர்களுடன் ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் மாநகர பொறியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-02-17 07:31 GMT
ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சாலை பணிகள் மற்றும் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து விடுபட்ட பணிகள் மற்றும் தொடங்க உள்ள பணிகளை தாமதமின்றி தரமாக விரைந்து முடிக்க அலுவலர்களுடன் ஆலோசனை வழங்கினார். உடன் மாநகர தலைமை பொறியாளர் லட்சுமணன், துணை மாநகர பொறியாளர்கள் செல்வநாயகம், கண்ணன், உதவி செயற் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.