ஈரோட்டில் மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை

ஈரோடு மக்களவைத் தொகுதி பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா மக்களவைப் பொதுத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2024-04-08 14:03 GMT

ஆலோசனை மேற்கொண்ட அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஈரோடு மக்களவைத் தொகுதி பொதுப் பார்வையாளர் திரு.ராஜீவ் ரஞ்சன் மீனா , மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, மக்களவை பொதுத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை பொதுத் தேர்தலில் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை முறையாக கண்காணிக்கவும் பார்வையாளர்களை நியமித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

மேலும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு திரு.ராஜீவ் ரஞ்சன் மீனா, பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தல் விழிப்புணர்வு பணிகள், சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Tags:    

Similar News