வேட்பாளர்களின் செலவினங்கள் தொடர்பான கலந்தாய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் செலவினங்கள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடான கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தபி.என்.ஸ்ரீதர் தலைமையில் ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வேட்பாளர்களின் செலவினங்களை கணக்கீடு செய்யும் பொருட்டு Rate Chart தயார் செய்யப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்து நடைமுறைப்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.