திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Update: 2024-06-06 15:26 GMT

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தை முன்னெடுத்து செல்வதில் முன்னணி தோழருமாக விளங்கிய, சுதந்திரப் போராட்ட வீரர் முதுபெரும் தோழர் மொழிப்பள்ளி.வி.ராமசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கான வரவேற்பு குழு கூட்டமானது

திருச்செங்கோடு ஆஞ்சநேயர் கோவில் வீதியில் அமைந்துள்ள, காவேரி நினைவகத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்விற்கு திருச்செங்கோடு நகரச் செயலாளர் ராயப்பன் தலைமை தாங்கினார். திருச்செங்கோடு ஒன்றிய கமிட்டி உறுப்பினர் வேலாயுதம் வரவேற்புரை ஆற்றினார் .

நாமக்கல் மாவட்ட கட்சி செயலாளர் எஸ்.கந்தசாமி , கட்சி செயற்குழு உறுப்பினர்கள் பி.பெருமாள் ஏ.ரங்கசாமி, ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிநாராயணன் உள்ளிட்டோர், மோளியப்பள்ளி வி.ராமசாமி அவர்களுடன் பழகிய அனுபவம் மற்றும் அவரின் அசாத்திய கட்சிப் பணிகள்,சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு விசைத்தறி தொழிலாளர்கள் எண்ணற்ற போராட்டங்களில் பங்கெடுத்தது,

அவர்கள் உரிமைக்காக போராடியது குறித்து நினைவு கூர்ந்து பேசினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினரும் கட்சியின் மாவட்ட பொறுப்பாளருமான முத்து கண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இதில் தோழர் மோளியப்பள்ளி. வி.ராமசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவினை மிகச் சிறப்பாக நடத்துவது, என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தலைவராக தோழர் ஆதிநாராயணன், செயலாளராக தோழர் கணேஷ் பாண்டியன், பொருளாளராக திருச்செங்கோடு கட்சி ஒன்றிய செயலாளர் மனோகரன் மற்றும் உதவி செயலாளர்கள், துணைத் தலைவர்கள், சிஐடியு தோழர்கள் ,மாதர் சங்கத் தோழர்கள், எல்ஐசி தோழர்கள், சாலை போக்குவரத்து தோழர்கள் அடங்கிய குழுவும், தமுஎகச, வி,ச. வாலிபர் அரங்கம், மீடியா குழு உறுப்பினர்கள் அடங்கிய

குழுவும், திருச்செங்கோடு நகர ஒன்றிய கமிட்டி கிளை உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்பு குழுவில் தேர்வு செய்யப்பட்டனர் . 23.7.2024 அன்று தோழர் வி.ராமசாமி நூற்றாண்டு விழாவை திருச்செங்கோடு கொங்கு சமுதாய கூடத்தில் சிறப்பாக நடத்துவது, அவருடைய நினைவாக சிறப்பு மலர் வெளியிடுவது, இந்த நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில தலைவர்களை பங்கேற்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தின் நிறைவில் வரவேற்பு குழு செயலாளர் கணேஷ் பாண்டியன் நன்றி உரை வழங்கினார். திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News