ஏலம் எடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக பார் நடத்துவதற்கு உரிமை கோரிய நபர்களுக்கான கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Update: 2023-12-11 10:28 GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக பார் நடத்துவதற்கு உரிமை கோரிய நபர்களுக்கான கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பார்கள் ஏலம் கோரியவர்களிடம் ஆலோசனை கூட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் நடைபெறக்கூடிய அரசு மதுபான கடைகளில் பார் நடத்துவதற்கான ஏலம் கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெறவில்லை. இந்நிலையில், தற்போது ஆன்லைன் மூலமாக பார் நடத்துவதற்கு உரிமை கோரிய நபர்களுக்கான கலந்தாய்வு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து பார் உரிமை கோரியவர்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் பார்கல் ஏலம் எடுக்காததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.ஒருவழியாக மாவட்ட நிர்வாகம் தற்போது தான் பார்கள் எடுத்து நடத்துவதற்கு வாய்ப்பு அளித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News