மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-02 08:38 GMT
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் (Rights Project) கீழ் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 2 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தில் பணிபுரியும் 406 களப் பணியாளர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இந்தப்பணி 30.12.2023-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கணக்கெடுக்கும் பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கணக்கெடுக்க உள்ளனர்.