அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் தொடரும் சோதனை

Update: 2023-11-05 13:58 GMT
தானிப்பாடி கம்பி வியாபாரி வீட்டில் கடை,வீடு மற்றும் குடோன்,பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 4 இடங்களில் மத்திய துணை தொழிற் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் வருமான வரி துறை அதிகாரிகள் 3 கார்களில் 20 வதுக்கும் மேற்பட்டோர்கள் அதிரடி சோதனை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி கம்பி வியாபாரி வீட்டில் கடை,வீடு மற்றும் குடோன்,பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 4 இடங்களில் மத்திய துணை தொழிற் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் வருமான வரி துறை அதிகாரிகள் 3 கார்களில் 20 வதுக்கும் மேற்பட்டோர்கள் அதிரடி சோதனை தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள அருணை கல்வி நிறுவன வளாகத்தில் வீடு , அந்த வளாகத்தில் அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, அருணை பார்மஸி கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி, அருணை செவிலியர் கல்லூரி மற்றும் மெட்ரிக் பள்ளி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கரன் கலைக் கல்லூரி குமரன் பாலிடெக்னிக் ஆகிய கல்வி நிறுவனங்களும் மற்றும் முகாம் அலுவலகம் ஆகிய இடங்களில் 30 கார்களிலிலும் 3 பேருந்துகளிலும் 150-க்கும் மேற்பட்ட வருமான வரி துறை அதிகாரிகள் அதிரடியாக ( நவ3 )தேதி அதிகாலை 7 மணிக்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் எ.வவேலுக்கு சொந்தமான அருணை கட்டுமான நிறுவனத்தை அருணை வெங்கட் என்பவர் நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தார் சாலை காண்டாக்ட், கட்டுமான பணிகள், கால்வாய் போன்றவைகள் மற்றும் நெடுஞ்சாலை துறையின் பணிகளை எடுத்து செய்து வருகிறார். மேலும் திரவண்ணாமலை நகரத்தில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடைப்பெற்று வருவகின்றனர்.

காலை முதல் அருணை கட்டுமான நிறுவனத்தில் நடைப்பெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று திருவண்ணாமலை கீழ் நாச்சி பட்டு பகுதியில் உள்ள கஜலட்சுமி நகரில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் இரண்டாவது மகன் டாக்டர் எ.வ.வே.கம்பனின் வீட்டில் இரண்டு கார்களில் 5க்கும் மேற்பட்ட வருமான வரி துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமைச்சரின் எ.வ.வேலு வின் தொடர்புடையவர்களின் சோதனை விரிவு படுத்தபட்டு திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பகுதியைச் சேர்ந்த அலிபாயில் மகான் ஜமால் பாய் இவர் அப்பகுதியில் கம்பி கடை, சிமெண்ட் கடை, பெட்ரோல் பங்க், மொத்த வியாபாரம் செய்து வருகிறார். தற்போது அவருடைய வீட்டில் கடை,வீடு மற்றும் குடோன்,பெட்ரோல் பங்க் உள்ளிட்ட நான்கு இடங்களில் மத்திய துணை தொழிற் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் வருமான வரி துறை அதிகாரிகள் 3 கார்களில் 20 வதுக்கும் மேற்பட்டோர்கள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை விரிவு படுத்த உள்ளனர். தொடர் வருமான வரி துறையினர் சோதனை திமுக பிரமுகர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News