கும்மிடிப்பூண்டி அருகே தொடர் தண்ணீர் தட்டுப்பாடு

கும்மிடிப்பூண்டி அருகே தொடர் தண்ணீர் தட்டுப்பாட்டை கண்டித்து சாலை மறியல் நிகழ்விடத்திற்கு வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2024-05-03 07:06 GMT

கும்மிடிப்பூண்டி அருகே தொடர் தண்ணீர் தட்டுப்பாட்டை கண்டித்து சாலை மறியல் நிகழ்விடத்திற்கு வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஓபசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட  ஓபசமுத்திரம் கடந்த ஆறு மாத காலமாக தண்ணீர் தட்டுப்பாட்டு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீரன் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று திடீரென சுண்ணாம்பு குளம் - பூங்குளம் சாலையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பல மணி நேரம் காத்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது.  பின்னர் தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீரன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் அப்போது ஊராட்சி மன்ற தலைவருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த ஆரம்பாக்கம் போலீசார் பொதுமக்களிடம் தொடர்ந்து சமராச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தாலும் போராட்டத்தை கைவிடாத நிலையே நீடித்து வருகிறது. திமுக ஊராட்சி மன்ற தலைவர் முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News