ஊதியம் கேட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் தற்கொலை மிரட்டல்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் சேலம் தனி குடிநீர் திட்ட அதிகாரிகளை கண்டித்து தொட்டில் பட்டி தனி குடி நீர் நீரேற்று திட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி தொழிலாளர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-12 08:14 GMT

தொழிலாளர்கள் போராட்டம் 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தொட்டில் பட்டியில் சேலம் மாநகராட்சி தனி குடிநீர் நீரேற்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. நான்கு ராட்சர மின்மோட்டோர்களை கொண்டு நாள் ஒன்றுக்கு சுமார் 158 எம்.எல்.டி, தண்ணீர் சேலம் மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டு வருகிறது .இந்த பணிகளை மேற்கொள்வதற்கு சுமார் 29 ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் தனி குடிநீர் திட்ட அதிகாரிகள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக சம்பளம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களில் இருப்பதால் பண்டிகை செலவு செய்வதற்கு கூட பணம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தொட்டில் பட்டி தனி குடி நீர் நீரேற்று திட்டத்தின் பயன்படுத்தப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி ஒப்பந்த தொழிலாளர்கள் 20 பேர் தற்கொலை மிரட்டல் வித்தனர்.

தகவல் அறிந்த மேட்டூர் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து தற்கொலை மிரட்டலை கைவிடுத்து குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தொழிலாளர்கள் கீழே இறங்கி வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News