அனுகிரகா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சாணார்பட்டி அருகே அனுகிரகா கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.;
Update: 2024-02-25 13:29 GMT
அனுகிரகா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்தஉள்ள நொச்சி ஓடைப்பட்டியில் உள்ள அனுகிரகா கல்லூரியில் 11-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கல்லூரி செயலர் ஜார்ஜ் பெர்னாட்ஷா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஐசக் வரவேற்புரையாற்றினார். கல்லூரி குழுமத்தின் தலைவர் லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கினார். இதில் 236 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. அதில் 164 இளங்கலை மாணவர்களுக்கும்,74 முதுகலை மாணவர்களுக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) தர்மராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கினார்.