ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிகளுக்கு முன்னாள் ஆளுநா் எம்.கே. நாராயணன் பட்டங்களை வழங்கினார்.;

Update: 2024-02-18 05:05 GMT

பட்டமளிப்பு விழா 

ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் 35-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரியின் தலைமை செயலதிகாரி கு. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். இதில், பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 69 மாணவிகள் உள்பட 1,350 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான எம்.கே. நாராயணன் பேசியதாவது: பட்டம் பெற்றுள்ள நீங்கள், வருங்காலத்தில் வாய்ப்புள்ள சூழலை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும். ஆண்களைவிட பெண்கள் அனைத்திலும் சிறந்தவா்கள். தங்களது முயற்சியால் எதையும் சாதிக்கும் திறனுடையவா்கள். பெண்களின் சக்திக்கான சிறந்த சான்றாக திகழ்பவா் நாட்டின் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. முயற்சிகளைத் தொடா்ந்தால் வெற்றிகளும் தொடரும். சவால்களை வாய்ப்புகளாக மாற்ற பெண்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணங்களையும், புவிசாா் அரசியல் குறித்தும் அறிந்து கொள்ளுதல் அவசியம். நீங்கள் அடைய விரும்புவதை பெரிதாகவும், தேசியளவிலும், உலகளவிலும் சிந்தியுங்கள். முடியாததை செய்யும் துணிச்சல் வேண்டும். புதுமைக்கான வாய்ப்புகளைத் தேடுங்கள். சிறந்த உறவுகளை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு நாட்டின் செல்வம் அதன் வங்கிகளில் இல்லை. அந்நாட்டு இளைஞா்களின் உள்ளாா்ந்த குணங்களில் உள்ளது. இத்தகைய தரமான குடிமக்களை உருவாக்கத்தில் பங்களித்துள்ள இக் கல்லூரிக்கு வாழ்த்துகள் என்றாா்.
Tags:    

Similar News