பிரையண்ட் பூங்காவில் குளுமையான சூழல் :சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் 61-வது மலர் கண்காட்சியை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

Update: 2024-05-18 01:29 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் இன்று 61-வது மலர் கண்காட்சி மேளா தாளங்கள் முழங்க துவங்கப்பட்டது, இந்த மலர் கண்காட்சியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக அலங்கார மேடையில் ஆயிரக்கணக்கான அலங்கார செடிகள் காட்சிபடுத்தப்பட்டன, மேலும் காய்கறிகளால் கொரிலா,டிராகன்,பாண்டா கரடி உள்ளிட்டவைகள் வடிவமைக்கப்பட்டன,மேலும் 70,000 கார்னேசன் மலர்களை கொண்டு மயில்,சேவல்,360 டிகிரி செல்பி பாயிண்ட்,பொம்மை உள்ளிட்டவைகள் காட்சிபடுத்தப்பட்டன.

மேலும் இலைகளால் டெடி பியர் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் பெங்களூர், கொல்கத்தா,டெல்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் இருந்து சுமார் 1 லட்சம் மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது, சால்வியா,பாப்பி, டெல்பினியம், ஆஸ்டர்,மேரி கோல்டு ,பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுலா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா பூ வகைகள் உள்ளிட்ட பூக்கள் ம‌ல‌ர் ப‌டுகைக‌ளில் பூத்து குலுங்குவதை பெய்து வரும் சாரல் மழையில் சுற்றுலாப்பயணிகள் நனைந்த படி ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர், மேலும் இந்த வருடம் மலர் கண்காட்சியில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிவோர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News