குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2ம் ஆண்டு நினைவஞ்சலி
குன்னூர் அருகே கடந்த 2021ல் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராபத் உட்பட 14 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 2ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கடந்த குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி முப்படை தளபதி பிபின் ராபத், அவரது மனைவி உட்பட 14 பேர் வந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 14 பேரும் உயிரிழந்த நிலையில் இன்று இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
ராணுவ பயிற்சி கல்லூரி துணை கமாண்டன்ட் ரியர் அட்மிரல் புருவீர் தாஸ், பிரிகேடியர் அனுராக் பரத்வாஜ். ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். பின்னர்ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் பிபின் ராவத்திற்கு நினைவுத்தூண் வைக்கப்பட்ட இடத்தில் ராணுவத்தினர் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட போது உதவிய நஞ்சப்பசத்திரம் கிராம பகுதி மக்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் அரசு, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.