திருப்பூரில் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் அம்மா காலனி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-06 11:07 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

இந்தியா கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் சுப்புராயனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது குறித்து, இன்று அண்ணா காலணி பகுதி கழகத்திற்கு உட்பட்ட 22,23,24 மற்றும் 25-வது வார்டு வாரியாக BLA2 மற்றும் BLA2 பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாநகர செயலாளர் , மேயர் தினேஷ்குமார் , வடக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திராவிட மணி , பகுதி கழகச் செயலாளர் மின்னல் நாகராஜ் ,வட்ட கழக செயலாளர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News