கொத்தமல்லி இலை விலை உயர்வு
தேனி மாவட்டத்தில் கொத்தமல்லி இலை விலை கிலோ ரூபாய் 140 ஆக உயர்ந்தது.
Update: 2024-06-15 16:14 GMT
தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு அன்றாடம் கடமலைக்குண்டு ,வருசநாடு, சீலையம்பட்டி, சின்னமனூர், ராசிங்கபுரம் பகுதிகளில் இருந்து தினமும் 300 முதல் 400 கிலோ கொத்தமல்லி இலை வரத்து இருக்கும் கடந்த சில நாட்களாக கொத்தமல்லி வரத்து 100 கிலோ என குறைந்துள்ளது இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கிலோ 40க்கு விற்ற கொத்தமல்லி இலை நேற்றும் இன்றும் கிலோ ரூபாய் 140 ஆக விலை உயர்ந்துள்ளது