சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கொத்தமல்லி விலை அதிகரிப்பு !

வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கொத்தமல்லி விலை கிடுகிடுவென விலை அதிகரிப்பு விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2024-06-15 06:06 GMT

கொத்தமல்லி விலை அதிகரிப்பு

வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கொத்தமல்லி விலை கிடுகிடுவென விலை அதிகரிப்பு விவசாயிகள் பெருமகிழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் கொத்தமல்லி புதினா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இருந்து கொத்தமல்லி விளைச்சல் செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கடுமையான வெயில் தாக்கத்தால் கொத்தமல்லி விலை சரிவை சந்தித்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொத்தமல்லிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டு கொத்தமல்லி ரூ 70 ரூபாய் முதல் ரூ. 100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கொத்தமல்லி விலை அதிகரிப்பால் பகுதியிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணியில் விவசாயிகளுக்கு ஈடுப்பட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News