திண்டுக்கல்லில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 4 மண்டலங்களுக்கும் பொறுப்பு உதவி ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-21 09:30 GMT
திண்டுக்கல் மாநகராட்சி 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையர்கள் (பொ) நியமித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. என் நிலையில் சுற்றியுள்ள 10 ஊராட்சிகளை,
இணைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது அரசால் அமல்படுத்தப்படாமல் உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு நகர திட்டமிடல் அதிகாரி ஜெயக்குமார் ,
வடக்கு மண்டலத்திற்கு உதவி ஆணையர் வரலட்சுமி, தெற்கு மண்டலத்திற்கு உதவி நகர திட்டமிடுநர் வள்ளி ராஜம், கிழக்கு மண்டலத்திற்கு உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் தொய்வின்றி பணிகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.