எடப்பாடி அருகே வார சந்தையில் பருத்தி ஏலம்

கொங்கணாபுரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 70 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2024-02-17 15:12 GMT

விற்பனைக்கு வந்த பருத்தி மூட்டைகள் 

கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 70 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏல விற்பனையானது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை செயல்பட்டு வருகிறது.

சனிக்கிழமை நேற்று நடைப்பெற்ற பருத்தி டெண்டரில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 70 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சுமார் 2350 பருத்தி மூட்டைகள் விவசாயிகளால் கொண்டவரப்பட்டு மொத்தம் 475 லாட்டுகளாக  வைத்து ஏலம் விடப்பட்டது.

BT ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 6600 முதல் அதிக பட்சமாக ரூபாய் 7469 வரையிலும், DCH ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 9650 முதல் அதிக பட்சமாக ரூபாய் 12169 வரையிலும் கொட்டு ரக பருத்தி ரூ 4350 முதல் ரூ 5190 விலை விற்று தீர்ந்து மொத்தம் 70லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைப்பெற்றது. அடுத்த டெண்டர் 24.02.24 சனிக்கிழமை  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News