ரூ.1.25 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.1.25 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2024-01-18 12:40 GMT

 மல்லசமுத்திரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.1.25 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.  

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 60 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டாலுக்கு ரூ.6080முதல் ரூ.7280வரையிலும், கொட்டு பருத்தி ரூ.3900 முதல் ரூ.5100 வரையிலும் என மொத்தம் ரூ.1.25 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம், 24ஆம் தேதி நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
Tags:    

Similar News