பஞ்சு மிட்டாய்: நாகையில் அதிகாரிகள் ஆய்வு
நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் பஞ்சு மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்யப்பட்டது.
பஞ்சு மிட்டாயில் தடைசெய்யப்பட்ட நிறமிகள் கலந்து தயாரிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் இவைபோன்ற பஞ்சு மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று உணவு பாதுகாப்புத்துறை மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் ஆகியோரின் உத்தரவுப்படி நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
இதன் ஒரு பகுதியாக இன்று ( 10.02.24 ) காலை நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு விற்பனை செய்யப்படும் ** பஞ்சு மிட்டாய் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் நிறமிகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. தொடர்ந்து இதேபோல் விற்பனை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. உடன் உணவு பாதுகாப்புத்துறை பதிவு / உரிமம் சான்று பெற உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
தடைசெய்யப்பட்ட நிறமிகள் கலந்து பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தால் 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையரக வாட்ஸ்அப் புகார் எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டுகிறோம். புகார்தாரர் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும்.