பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைப்பெற்றது.;

Update: 2024-06-22 02:56 GMT

பருத்தி மறைமுக ஏலம்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடப்பு ஆண்டு பருத்தி மறைமுக ஏலம் (21.06.2024) நடைபெற்றது. இம்மறைமுக ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்று பகுதிகளான மதகரம், சத்தியமங்கலம், வலங்கைமான், கோபுராஜபுரம், அய்யம்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து 677 விவசாயிகள் தங்களது பருத்தியினை விற்பனைக்கு எடுத்து வந்திருந்தனர். இதில் கும்பகோணம், செம்பினார் கோவில், பண்ரூட்டி, விழுப்புரம், ஆந்திரபிரதேசம், தேனி, பண்ருட்டி பகுதிகளைச் சார்ந்த 10 வணிகர்கள் கலந்து கொண்டனர். இம்மறைமுக ஏலத்தில் 94.7 மெ.டன் அளவு பருத்தி வரத்து வரப்பெற்றது.

Advertisement

அதிகப்பட்சமாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7269/- என்ற வீதத்திலும் குறைந்தபட்சமாக குவாண்டால் ஒன்றிற்கு ரூ. 5339/- மற்றும் சராசரியாக ரூ. 6489/- என்ற வீதத்திலும் விற்பனை செய்யப்பட்டது. பருத்தியின் மொத்த மதிப்பு ரூபாய் 61 இலட்சம் ஆகும். இம்மறைமுக ஏலமானது விற்பனைக்கூட கண்காணிப்பாளர் திருமதி.இரா.தாட்சாயினி தலைமையில், மேற்பார்வையாளர் திரு.ப.கோ.சிவானந்த் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்து குவிண்டாலுக்கு ரூ.9500/-, கருப்பு கவுனி நெல் குவிண்டாலுக்கு ரூ.9500/-, எள் குவிண்டாலுக்கு ரூ.13500 மற்றும் கொப்பரை குவிண்டாலுக்கு ரூ.8500/- என்ற அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News