பஞ்சு பார லாரி கவிந்து - 4 பேர் காயம்

வேலூர் அருகே கோயம்புத்தூரிலிருந்து ஒரிசாவுக்கு பஞ்சு நூல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-12-29 06:04 GMT

கோயம்புத்தூர் பகுதியில் இருந்து ஒடிசாவுக்கு பஞ்சு காட்டன் நூல் ஏற்றி வந்த லாரி வேலூர் வேலப்பாடி பகுதியில் வளைவில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் உள்பட லாரியில் பயணித்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவம் இடத்திற்கு வந்த வேலூர் தெற்கு போலீசார் அவர்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி விபத்தினால் மின்கம்பம் சாய்ந்து அப்பகுதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் போக்குவரத்து போலீசார் இந்த சாலையில் வரும் வாகனங்களை மாற்று வழியில் அனுப்பிவைத்தனர். விபத்தில் சேதம் அடைந்த லாரியை கிரேன் மூலமாக லாரியை அப்புறப்படுத்த பணியில் போக்குவரத்து போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News