மல்லசமுத்திரத்தில் ரூ.5 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் ரூ.5 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது.;
Update: 2023-10-18 12:05 GMT
பருத்தி ஏலம்
மல்லசமுத்திரத்தில் ரூ.5 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் இன்று நடந்த பருத்தி ஏலத்தில் 300 மூட்டைகள் வரத்து வந்தது. இதில், சுரபி ரகம் ரூ.6370 முதல் ரூ.7250வரையிலும், பி.டி.ரகம் ரூ.6081 முதல் ரூ.7269வரையிலும், கொட்டு பருத்தி ரூ.3619 முதல் ரூ.4930வரையிலும் என மொத்தம் ரூ. 5லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த பருத்தி ஏலம் வரும் 25ம் தேதி நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.