தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு கவுன்சிலர் வாழ்த்து

பேட்டை மாநகராட்சி ராணி அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 96.5 சதவீதம் தேர்ச்சி பெற்றநிலையில், மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி நேரில் சந்தித்து வாழ்த்தினார்.;

Update: 2024-05-11 07:48 GMT

தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு கவுன்சிலர் வாழ்த்து

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) வெளியானது. இதில் பேட்டை மாநகராட்சி ராணி அண்ணா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 96.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ராபியத்துல் ரோஷன் என்ற மாணவி 482 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இந்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் ஆசிரியர்கள், மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி ஆகியோர் நேரில் பாராட்டினர்.
Tags:    

Similar News