நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் திடீர் ராஜினாமா
தனது வார்டு மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் உதவி செய்யவில்லை என கூறி நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-04-23 08:20 GMT
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 36வது வார்டு மாமன்ற உறுப்பினராக சின்னதாய் கிருஷ்ணன் உள்ளார். அவர் இன்று (ஏப்.23) தனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்க்கு மனு அனுப்பியுள்ளார். அதில் எனது வார்டு மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு மாநகராட்சி உதவி செய்யவில்லை என கூறியுள்ளார்.