ஆற்றூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு, தர்ணா
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சியில் 15வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு திமுகவை சேர்ந்த 11 உறுப்பினர்கள் வெற்றிபெற்று, திமுக -வை சேர்ந்த பீனா என்பவர் தலைவராகவும், அதே கட்சியை சேர்ந்த தங்கவேல் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கபட்டார். எனினும் கோஷ்டி பூசல் காரணமாக தலைவர் மற்றும் துணை தலைவர் இரு அணியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பேரூராட்சியில் நேற்று நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் தலைவரை கண்டித்து, திமுக கட்சியை சேர்ந்த துணை தலைவர் தங்கவேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிவன்,சைலஜா,ஜேமஸ் மற்றும் அதிமுக வை சேர்ந்த ஜெயசுதர்ஷன் ஆகியோர் வெளிநடப்பு செய்து பேரூராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட துணை தலைவரை வெளியேற்ற முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதனை அறிந்த திருவட்டார் போலீசார் சம்பவ இடம் வந்து சம்பவம் குறித்து விசாரித்தனர்.