காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாதாந்திர கூட்டம் நேற்று அறிஞர் அண்ணா அரங்க கூட்டரங்கில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் உள்ளிட்ட 51 உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வழக்கம்போல் கூட்டத்தை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மற்றும் திருக்குறள் வாசித்த பின் கூட்டம் தொடங்கலாம் என மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவித்தார்.
அப்போது 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்களுடன் ஆணையரை சந்திக்க முயன்ற போது , மாமன்ற கூட்டத்தில் மட்டுமே தங்களை சந்திப்பேன் என கூறியும் , அடிப்படை வசதிகள் தேவைக்கு அணுகிய நிலையில் இது போன்ற வார்த்தைகள் மாமன்ற உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில் உள்ளதால் உடனடியாக அவரை மாற்றும் வரை கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் எனக் கூறியதால் உடனடியாக துணை மேயர் உள்ளிட்ட 23 தி.மு.க. உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறினர். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க , பா.ம.க , பா.ஜ.க. உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் கடந்த மூன்று மாதமாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் கூட்டத்தில் இணைக்கப்படவில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.